search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதலில் சதி - பாக். அதிகாரியை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் இந்தியா
    X

    மும்பை தாக்குதலில் சதி - பாக். அதிகாரியை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் இந்தியா

    மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போல் உதவியை தேசிய புலணாய்வு முகமை (என்.ஐ.ஏ) நாடியுள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் தாக்குதலில் 194 பொதுமக்கள் பலியாகினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா சந்தேகித்தது.

    இதனை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அமிர் சுபைர் சித்திக் மீது தேசிய புலணாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிக்கை தயார் செய்தது.

    இந்நிலையில், தென் இந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரங்கள் மற்றும் முக்கிய துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்த அமிர் சுபைர் சித்திக் உள்ளிட்ட 3 அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. இதனை அடுத்து, அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட சர்வதேச போலீஸ் (இண்டெர்போல்) உதவியை என்.ஐ.ஏ நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #TamilNews
    Next Story
    ×