search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
    X

    பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

    பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. சட்ட தீர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமளி நீடித்தது.



    கூட்டத் தொடர் முடிந்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்ததும், பா.ஜ.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே திரண்டனர். பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த விடாமல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கபட நாடகத்தை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    இதுபற்றி பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார் நிருபர்களிடம் பேசுகையில், “மக்களை இணைப்பதற்கு பா.ஜ.க. பாடுபடுகிறது. காங்கிரஸ் கட்சியோ, மக்களை பிரிக்க பாடுபடுகிறது. பிரிவினைவாத, எதிர்மறையான அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. பாராளுமன்றம் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. கடந்த 23 நாட்களில் காங்கிரசின் இத்தகைய எதிர்மறை அணுகுமுறையை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

    Next Story
    ×