search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நேரத்தில் 542 ஜோடிகளுக்கு திருமணம் - குஜராத்தில் தொண்டு நிறுவனம் நடத்தியது
    X

    ஒரே நேரத்தில் 542 ஜோடிகளுக்கு திருமணம் - குஜராத்தில் தொண்டு நிறுவனம் நடத்தியது

    குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஒரு தொண்டு நிறுவனம் ஒரே நேரத்தில் 542 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து, சீதனப் பொருட்களையும் அளித்து மகிழ்வித்துள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சாவ்லி நகரை மையமாக கொண்டு மகேந்திரா ஜாஷ்பை அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த தொண்டு நிறுவனம் நேற்று ஒரே நேரத்தில் 542 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைத்துள்ளது. இதில் 531 இந்து ஜோடிகளும், 10 முஸ்லிம் ஜோடிகளும், ஒரு கிறிஸ்தவ ஜோடியும் அடங்கும்.
     
    இந்த மெகா திருமண நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி விஜய் ருபானி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 4 பேர் மாற்று திறனாளிகள். திருமணத்தை நடத்தி வைத்த விஜய் ருபானி அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.



    மேலும், இந்த மெகா திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேடன் இனாம்தாருக்கு முதல் மந்திரி தனது பாராட்டை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×