search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியத்திற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - சோனியா, ராகுல் பங்கேற்பு
    X

    காவிரி மேலாண்மை வாரியத்திற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - சோனியா, ராகுல் பங்கேற்பு

    காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்றனர். #CauveryMangementBoard #Parliament
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்ற அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி, விவசாயிகள் பிரச்சினை, எஸ்.சி.,எஸ்.டி. சட்டத் தீர்ப்பு விவகாரம், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கூட்டுப் போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி சிவா எம்.பி. பதாகை ஏந்தியிருந்தார். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகையை டி.ராஜா எம்.பி. ஏந்தியிருந்தார்.



    மத்திய அரசைக் கண்டித்து இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மட்டுமின்றி ரெயில்களை மறித்தும் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CauveryMangementBoard #Parliament 
    Next Story
    ×