search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம்- அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
    X

    சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம்- அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #CBSE #CBSEPaperLeaks #supremecourt
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.

    இதனால் இந்த இரு பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. இதில் 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்படும். 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான மறுதேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நேற்று 10-ம் வகுப்பு கணிதப்பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படாது என சிபிஎஸ்இ அறிவித்தது.

    இந்நிலையில், சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் தொடரப்பட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணை செய்த நீதிபதிகள் ஒரே விவகாரம் தொடர்பாக நிறைய வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும், மறுதேர்வு தொடர்பாக சி.பி.எஸ்.இ. எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது எனவும் தெரிவித்தனர். கேள்வித்தாள் வெளியான வெளியான விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.  #CBSE #CBSEPaperLeaks #supremecourt

    Next Story
    ×