search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் மேஜர் ஆன பிறகு ஆதார் திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது - ஆதார் ஆணையம்
    X

    குழந்தைகள் மேஜர் ஆன பிறகு ஆதார் திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது - ஆதார் ஆணையம்

    குழந்தைகள் மேஜர் ஆன பிறகு ஆதார் திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #Aadhaar #Aadhaarcard
    புதுடெல்லி:

    ஆதார் திட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன.



    அப்போது, மனுதாரர்களின் வக்கீல்கள் கேட்ட கேள்விகளுக்கு ‘ஆதார் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின்’ தலைவர் அஜய் பூஷண் பாண்டே எழுத்துபூர்வமாக அளித்த பதில்களை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாசித்தார்.

    அதில், “குழந்தையாக இருந்தபோது ஆதார் எண் பெற்ற ஒருவர், 18 வயதை அடைந்த பிறகு ‘ஆதார்’ திட்டத்தில் இருந்து வெளியேற முடியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு ஆதார் ஆணைய தலைவர் பாண்டே, “ஆதார் சட்டப்படி, அப்படி வெளியேற அனுமதி கிடையாது” என்று பதில் அளித்திருந்தார். #Aadhaar #Aadhaarcard

    Next Story
    ×