search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை தேர்தல் - அமித்ஷா சென்ற இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தல் - அமித்ஷா சென்ற இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம்

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா சென்ற அதே இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். #KarnatakaElections2018 #RahulGandhi
    பெங்களூர்:

    மே 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் கர்நாடகத்தில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    மாநில சட்டசபை தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரசுக்கு கைவசம் இருக்கும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம் என்பதால் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறது.

    எனவேதான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத் தேர்தலைப் போல் கர்நாடகத்திலும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பல தடவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மடாதிபதிகளையும், மக்களையும் சந்தித்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தற்போது மீண்டும் 2 நாட்கள் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று சிவமொக்கா நகருக்கு வந்த ராகுல்காந்தி பஸ் நிலையம் சென்று மக்களை சந்தித்தார். பின்னர் அங்கு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதன் பிறகு தாவண கரே மாவட்டத்தில் ஹென்னள்ளி, ஹரிகரா, பாதி நகரங்களில் ஆதரவு திரட்டுகிறார். இரவு தாவண கரே பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை (4-ந்தேதி) ஹோல லக்கேரே, தும்கூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    குனிகல்நகரில் மக்களை நேரடியாக சந்திக்கிறார். தொடர்ந்து ராம்நகர் மாவட்டம் மாகடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய பின்பு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்யவும் இந்த இடங்களில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா சில நாட்களுக்கு முன்புதான் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். இதையடுத்து ராகுல்காந்தி அங்கு மீண்டும் கவனம் செலுத்தி இருக்கிறார்.

    அமித்ஷாவைப் போல் ராகுல்காந்தியும் தும்கூரு மாவட்டத்தில் உள்ள சித்த கங்கா மடாதிபதியான 111 வயது சிவகுமர சுவாமியை சந்தித்து ஆசி பெறுகிறார். மேலும் சில மடங்களுக்கும் செல்கிறார். #KarnatakaElections2018 #RahulGandhi #AmitShah
    Next Story
    ×