search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.பி.க்கள் தொடர் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    எம்.பி.க்கள் தொடர் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    பாராளுமன்றத்தில் இன்றும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. #Parliament #LokSabha #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. அமளியை காரணம் காட்டி, அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக மக்களவை  முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.

    காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களுடன், எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தில் செய்த மாற்றம், ஈராக்கின் மொசூல் நகரில் இந்தியர்கள் படுகொலை போன்ற விவகாரங்களையும் முன்வைத்து அரசுக்கு எதிராக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  #Parliament #LokSabha #RajyaSabha #Tamilnews
    Next Story
    ×