search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக மும்பையில் முஸ்லிம் பெண்கள் பேரணி
    X

    முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக மும்பையில் முஸ்லிம் பெண்கள் பேரணி

    மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாரஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தினர். #TripleTalaqBill #Maharashtra #MuslimWomenRally
    மும்பை:

    ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது.

    இந்நிலையில், முஸ்லிம் தனிசட்டத்தில் அரசின் தலையீடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தினர். மத்திய அரசின் முடிவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.



    முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் கடந்த 27-ம் தேதி பேரணி நடைபெற்றது. முன்னதாக கடந்த 10-ம் தேதி புனே நகரில் முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #TripleTalaqBill #Maharashtra #Mumbai #MuslimWomenRally #tamilnews
    Next Story
    ×