search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - பீட்டர் முகர்ஜிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
    X

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - பீட்டர் முகர்ஜிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியை ஏப்ரல் 13-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைத்து வைக்குமாறு சி.பி.ஐ. கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #inxmediacase #PeterMukherjea #karthichidambaram
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள ஐ.என். எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுத்தர தடையில்லா சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டு முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. 

    இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் அமைந்து இருந்தது.
     
    அவர் கார்த்தி சிதம்பரத்துக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறியிருந்தார். எனவே, இவ்வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தையும், இந்திராணி முகர்ஜியையும் நேருக்குநேர் அமர வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    குறிப்பாக அன்னிய முதலீடு அளவுக்கு அதிகமாக பெறப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு கை மாறிய பணம் எவ்வளவு என்றும் விசாரணை நடந்தது.

    இந்த விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் கொடுத்ததை இந்திராணி முகர்ஜி மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில், இவ்வழக்கில் தொடர்புடைய இந்திராணியின் கணவரை காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் பீட்டர் முகர்ஜி  சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    விசாரணைக்கு பீட்டர் முகர்ஜி சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரனுடன் இவரை நேரில் வைத்து வாக்குமூலம் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, பீட்டர் முகர்ஜியை ஏப்ரல் 13-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைத்து வைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. #tamilnews #inxmediacase #PeterMukherjea #karthichidambaram 
    Next Story
    ×