search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலிவுட் நடிகர் பாருக் ஷேக்கின் 70-வது பிறந்த தினத்தை கொண்டாடும் கூகுள்
    X

    பாலிவுட் நடிகர் பாருக் ஷேக்கின் 70-வது பிறந்த தினத்தை கொண்டாடும் கூகுள்

    பிரபல இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுள், பாலிவுட் நடிகர் பாருக் ஷேக்கின் 70-வது பிறந்த தினத்தை கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது. #Googledoodle
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்தவரான பாருக் ஷேக், நடிப்பு கலையில் சிறந்தவராக விளங்கினார். திரைப்பட நடிகர் மட்டுமின்றி உலகளவில் தொலைக்காட்சி மற்றும் தியேட்டர்களிலும் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார். 1973-ல் எம்.எஸ்.சத்யுவின் கரம் ஹவா படம் தான் இவரது முதல் படம்.

    சாஷ்மே படோர், நூரி, ஷத்ரஞ் கே கிலாடி மற்றும் உம்ரோ ஜான் ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பை மறக்க முடியாது.  
    2010-ல் வெளியான லாகூர் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். மேலும், பாலிவுட் பிரபலங்களை பேட்டி எடுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடித்தவர்.

    இவர் கடந்த 2013-ம் ஆண்டு துபாயில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாருக் ஷேக்கின் 70-வது பிறந்தநாளான இன்று, அவரது நடிப்புக்கு கவுரவம் அளிக்கும் வகையில் சிறப்பு புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது. #Googledoodle #tamilnews
    Next Story
    ×