search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் தங்கைக்கு போலீஸ் வேலை
    X

    கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் தங்கைக்கு போலீஸ் வேலை

    கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை கிடைக்க உள்ளதால் அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மது என்ற வாலிபர் உணவு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டது தவறான குற்றச்சாட்டு என்று தெரிய வந்ததால் கேரளாவில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன் அரசு அதிகாரிகளுடன் மதுவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை கேரள அரசு செய்யும் என்று உறுதியும் அளித்தார்.

    ஆதிவாசி வாலிபர் மது கொலையுண்ட அதேநாளில் கேரளாவில் போலீஸ் எழுத்து தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மதுவின் தங்கை சந்திரிகா விண்ணப்பித்திருந்தார். அண்ணன் கொலையுண்ட துக்கம் இருந்தாலும் அதை மனதில் மறைத்துக்கொண்டு அவர் போலீஸ் எழுத்து தேர்வை எழுதினார்.


    இந்த நிலையில் போலீஸ் எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் சந்திரிகா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு முதல்நிலை பெண் காவலர் பணி கிடைக்க உள்ளது.

    எனது அண்ணன் மது செய்யாத குற்றத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் மனவேதனையை கொடுத்துள்ளது. எங்கள் குடும்பம் வறுமையில் வாடுவதால் அண்ணன் கொலையுண்ட நாளில் நான் மிகுந்த மனவேதனைக்கிடையே போலீஸ் எழுத்து தேர்வை சந்தித்தேன். தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் எனது குடும்பத்தினருக்கு பெரும் உதவியாக இருக்கும். கடவுள் அருளால் எனக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    Next Story
    ×