search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தொடங்கியது
    X

    25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தொடங்கியது

    உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து 25 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. #RajyaSabhaElections
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதில் உத்தரப்பிரதேசம் - 10, மகாராஷ்டிரா மற்றும் பீகார் தலா 6, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப்பிரதேசம் தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகம் தலா 4, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசா தலா 3, ஜார்கண்ட் - 2, சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தலா 1 என மொத்தம் 58 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது.

    இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில் பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் 5 வேட்பாளர்களில் 4 பேரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது.
     
    கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களுக்கு 3 பேர் ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கு பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து ஒரு இடத்திற்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, மொத்தம் 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 25 எம்.பி.க்கள் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்தந்த மாநில சட்டசபையில் இதற்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    #RajyaSabhaElections #TamilNews
    Next Story
    ×