search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை- மத்திய அரசு
    X

    ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை- மத்திய அரசு

    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் 13 நாட்களாக தொடர்ந்து முடங்கி உள்ளன. அதேசமயம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்கள் தாக்கல் செய்யப்பட்டு அவைக்குறிப்பில் சேர்க்கப்படுகிறது.

    அவ்வகையில், பாராளுமன்றத்தில் ஓய்வு வயது தொடர்பாக இன்று ஒரு கேள்வி எழுப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை’ என்றார்.

    இந்தியா முழுவதும் சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×