search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொருளாதார அமலாக்கத்துறை முதன்மை சிறப்பு இயக்குனராக சிமான்ச்சலா டேஷ் நியமனம்
    X

    பொருளாதார அமலாக்கத்துறை முதன்மை சிறப்பு இயக்குனராக சிமான்ச்சலா டேஷ் நியமனம்

    புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார குற்றப்பிரிவின் அமலாக்கத்துறை முதன்மை சிறப்பு இயக்குனர் பதவியில் சிமான்ச்சலா டேஷ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    அமலாக்கப் பிரிவு அல்லது அமலாக்க இயக்குனரகம் என்னும் அமைப்பு இந்தியாவில் பொருளாதாரச் சட்டங்களை கண்காணிக்கவும், பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் பணியாகும்

    வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின், வருவாய்த்றையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் அமலாக்கும் இந்த அமைப்பானது, அமலாக்கப் பிரிவு, இந்தியக் காவல் பணி, இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருமானவரி மற்றும் சுங்கம் & கலால் வரித்துறை அதிகாரிளைக் கொண்டும் செயல்படுகிறது.
     
    நாட்டில் நடைபெற்றுவரும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் பணிகளை அமலாக்கத்துறை கவனித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக கர்னல் சிங் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், இந்த அமைப்புக்கு முதன்மை சிறப்பு இயக்குனர் என்ற புதிய பதவியை உருவாக்க நிதித்துறை அமைச்சகம் சமீபத்தில் தீர்மானித்தது. இந்த பதவிக்கு அமர்த்தப்படும் முதல்நபரை மத்திய அரசின் பணியமர்த்தல் குழு தேர்வு செய்தது.

    அவ்வகையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம்வரை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் முன்னாள் தனிச் செயலாளராக பணியாற்றிய சிமான்ச்சலா டேஷ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2020-ம் ஆண்டு மே மாதம்வரை இந்த பதவியில் அவர் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×