search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திருத்தவோ, வாபஸ் பெறவோ முடியாது - மத்திய அரசு உறுதி
    X

    ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திருத்தவோ, வாபஸ் பெறவோ முடியாது - மத்திய அரசு உறுதி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திருத்தவோ, வாபஸ் பெறவோ முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜம்மு, காஷ்மீர் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை எதிர்கொண்டு அங்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது.

    குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டு திருத்தப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. சந்தேகப்படுமாறு காணப்படும் நபர்களை கைது செய்யவும், அவசியம் ஏற்பட்டால் விசாரணை நடத்தாமல் சுட்டுக் கொல்லவும் ஆயுதப்படையினருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளித்துள்ளது.

    ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தவறாக பயன்படுத்தி வருவதாக அங்குள்ள பொதுமக்களில் ஒரு பிரிவினரும், பிரிவினைவாத குழுக்களும் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திருத்தவோ, வாபஸ் பெறவோ முடியாது என மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராம் கங்காராம் ஆஹிர் பாராளுமன்றத்தில் இன்று  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, உறுப்பினரின் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பாராளுமன்ற மேல்சபையில் இன்று பதிலளித்த அவர், 1990-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திருத்தவோ, திரும்பப்பெறவோ முடியாது. எனினும், 1958-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மேலும், சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும், மனிதநேயத்துடனும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். #tamilnews
    Next Story
    ×