search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது’ - மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சொல்கிறார்
    X

    ‘முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது’ - மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சொல்கிறார்

    முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது, சவாலானது என்பதை தான் உணர்ந்து இருப்பதாக மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா (வயது 40), பாரதீய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளார். மறைந்த நாடாளுமன்ற சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகனான இவர், கடந்த 7-ந் தேதி மேகாலயா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் கான்ராட் சங்மா ஷில்லாங் நகரில் அளித்த பேட்டியில், முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது, சவாலானது என்பதை தான் உணர்ந்து இருப்பதாகவும், என்றாலும் அவற்றையெல்லாம் சமாளித்து மேகாலயா மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். 
    Next Story
    ×