search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை - நிர்மலா சீதாராமன்
    X

    ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை - நிர்மலா சீதாராமன்

    பா.ஜ.க. அரசை தாக்கி பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi #Rafaledeal
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தி பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பிற விவகாரங்களில் ஆளும் பாரதிய ஜனதாவை கடுமையாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

    இதுதேர்தல் நேரம் என்பதால் விவசாயிகள் நெருக்கடி தொடர்பாக ராகுல் காந்தி பேசுகிறார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது. அவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக வாக்கை மட்டும் பார்க்கிறார்கள்.

    காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் நிலை என்ன? தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது. கர்நாடகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; அதைப்பற்றி காங்கிரஸ் பேசவில்லை. 
    தொழில்நுட்பங்களை கொண்டு வெளிப்படை தன்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது, கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ராணுவ மந்திரிகளாக அங்கம் வகித்த பிரணாப் முகர்ஜி மற்றும் ஏ கே அந்தோணி ஆகியோரும் கூட தேச நலனை கருத்தில் கொண்டு ரபேல் விவகாரத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

    இதே நிலையை தான் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் கடைப்பிடித்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தை காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தேடிக் கொள்ளட்டும் என்றார். #NirmalaSitharaman #RahulGandhi #Rafaledeal #Tamilnews
    Next Story
    ×