search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழமைமிக்க இந்திய ஞானத்துக்கு ஆன்ம திருப்தி, அமைதியை அளிக்கும் சக்தி உண்டு - தலாய் லாமா
    X

    பழமைமிக்க இந்திய ஞானத்துக்கு ஆன்ம திருப்தி, அமைதியை அளிக்கும் சக்தி உண்டு - தலாய் லாமா

    ஜம்முவில் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய புத்த மத தலைவர் தலாய் லாமா, பழமைமிக்க இந்திய ஞானத்துக்கு ஆன்ம திருப்தி, அமைதியை அளிக்கும் சக்தி உண்டு என தெரிவித்தார். #Dalailama
    ஜம்மு:

    புத்த மத தலைவரான தலாய் லாமா,  திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார். அது முதல் இந்தியாவில் தான் இருந்து வருகிறார். 

    இந்நிலையில், ஜம்முவில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது பட்டமளிப்பு விழாவில் தலாய் லாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்வு காணலாம் என்றார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் மூலம் ஏற்படும் வன்முறைகள் பதிலுக்கு பதில் என தொடர்ந்து பெருகி வரும். ஆனால், இந்த உலகில் அமைதியை விரும்புபவர்கள் வன்முறை நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் இந்தியா அதில் முக்கிய பங்கு வகிக்கும்.

    நான் பள்ளி, பல்கலைக்கழகம் சென்று படித்ததில்லை. இந்தியாவில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.  சிறந்த ஆசிரியராக இந்தியா விளங்கி வருகிறது. பழமைமிக்க இந்திய ஞானத்துக்கு ஆன்ம திருப்தி, அமைதியை அளிக்கும் சக்தி உண்டு என குறிப்பிட்டுள்ளார். #Dalailama #Tamilnews
    Next Story
    ×