search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்
    X

    பெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்

    நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு கூறிய புகாரில் பெண் சம்மதத்துடன் நடந்த உறவு என்று நித்யானந்த தரப்பில் ஆஜரான வக்கீல் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
    பெங்களூர்:

    பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் கற்பழிப்பு புகார் கூறினார்.

    இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது ஆன்மீக பேரின்பம் என்ற பெயரில் தன்னை நித்யானந்தா கற்பழித்ததாக புகார் தெரிவித்து இருந்தார்.

    அதன் பேரில் ராமநகரம் போலீசார் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 2014-ல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி அவருக்கு பரிசோதனை நடந்தது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என முடிவு வெளியானது. பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு ராமநகரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் வக்கீல் நாகேஷ் ஆஜராகி வாதாடினார்.

    நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியிருக்கும் பெண் ஆசிரமத்தில் பல வருடங்கள் தங்கி உள்ளார். அவர் ஆன்மீக பேரின்பத்துக்காக விருப்பப்பட்டுத்தான் நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது கற்பழிப்பு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது கற்பழிப்பு ஆகாது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.
    Next Story
    ×