search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி உகாதி, குடி பத்வா புத்தாண்டு பண்டிகை வாழ்த்து
    X

    ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி உகாதி, குடி பத்வா புத்தாண்டு பண்டிகை வாழ்த்து

    ஆந்திரா, தெலுங்கானாவில் உகாதி எனவும் மகாராஷ்டிராவில் குடி பத்வா என கொண்டாடப்படும் புத்தாண்டு பண்டிகைக்கு ஜனாதிபதி கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #Ugadi #GudiPadwa
    புதுடெல்லி:

    கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இங்கு பண்டிகையானது  ஹிந்துக்களுக்கு புத்தாண்டான உகாதி என்று அழைக்கப்படுகிறது.

    மஹாராஷ்டிராவில் உள்ள் மக்கள் குடி பத்வா எனும் நாளாக இதனை கொண்டாடுகிறார்கள். பிரம்மா இந்த நாளில் பிரபஞ்சத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இதுவே இந்த திருவிழாவின் சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் சத்தியாயுக்கின் ஆரம்பத்தையே இந்த நாள் குறிக்கிறது. சனம மதத்தை பின்பற்றுகிற மணிப்பூர் மக்கள் சந்திர புத்தாண்டாக இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.

    “புத்தாண்டை கொண்டாடி வரும் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் இந்த வருடம் அனைவருக்கும் அற்புதமான ஓர் ஆண்டாக அமையும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “சாத்ரா சுக்லடி, உகாதி, குடி பத்வா, நவராத்திரி, சாஜிபு சீராவ்பா, செட்டி சந்த் போன்ற பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் சக குடிமக்களுக்கு இந்த சமயத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த மாதிரியான விழாக்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருகின்றன.  நம் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சகோதரத்துவத்தின் பிணைப்புகளை வலுப்படுத்திக்கொள்ளவும் இது உதவும்” என தெரிவித்துள்ளார். #Ugadi #GudiPadwa
    Next Story
    ×