search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் - மாயாவதி கைகோர்த்தால் எதிர்க்க தந்திரங்களுடன் தயாராக உள்ளோம்: யோகி ஆதித்யநாத்
    X

    அகிலேஷ் - மாயாவதி கைகோர்த்தால் எதிர்க்க தந்திரங்களுடன் தயாராக உள்ளோம்: யோகி ஆதித்யநாத்

    உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் - மாயாவதியும் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்க்க தந்திரங்களுடன் தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வியை தழுவியது. இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்கு மாயாவதியின் மறைமுக ஆதரவே காரணம் என கூறப்படுகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் ஏற்பட்ட தோல்வி பா.ஜ.க.வை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கேற்ப, எதிரும் புதிருமாக இருந்த அகிலேஷ் யாதவ் - மாயாவதி சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டணி தொடர்பாக டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அவர் கூறுகையில், “சமாஜ்வாதி - பகுஜன்சமாஜ் இணைந்தால் அதனை எதிர்க்க நாங்கள் தந்திரங்களுடன் தயாராக உள்ளோம். அதனை பொதுவெளியில் கூறமுடியாது. இரு கட்சிகளுமே உத்தரப்பிரதேசத்தை ஆண்டன. ஆனால், தனித்து போட்டியிட அவர்களால் முடியவில்லை. கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்ற குழப்பமும் அங்கு உள்ளது” என பேசினார்.

    மேலும், “முதல்வர் மற்றும் துணை முதல்வரின் தொகுதிகள் என்பதால், இந்த இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என அதீத நம்பிக்கை கட்சித்தொண்டர்கள் இடையே வந்துவிட்டது. இந்த அதீத நம்பிக்கை அவர்களின் தேர்தல் பணியில் தொய்வை ஏற்படுத்தி விட்டது” எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். #TamilNews
    Next Story
    ×