search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தூக்கமின்றி தவிக்கிறார்கள் - மாயாவதி கிண்டல்
    X

    பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தூக்கமின்றி தவிக்கிறார்கள் - மாயாவதி கிண்டல்

    உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தூக்கமின்றி தவிக்கிறார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சண்டிகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், பல்பூர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் நாங்கள் சமாஜ்வாடி கட்சியை ஆதரித்தோம். பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரே திட்டத்தின் கீழ் நான் இந்த முடிவை எடுத்தேன்.

    அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 2 தொகுதிகளிலும் பா.ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த தோல்வி பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து அவர்கள் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    அடுத்த கட்டமாக அவர்கள் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு தாமதமாக நடத்தினால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

    பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அந்த தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தலில் பயன்படுத்தினால் அதில் பா.ஜ.க. தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது. எனவே இனி வரும் தேர்தலில் ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறார். மிசா காலத்தை விட தற்போது நெருக்கடி நிலை அதிகமாக இருப்பதுபோல் உள்ளது.

    கடந்த தேர்தலின்போது நான் ஊழல் செய்ய மாட்டேன். மற்றவர்களையும் ஊழல் செய்ய விட மாட்டேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார்.

    அந்த வாக்குறுதி போலியானது என்பது தொழில் அதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதில் இருந்தே உறுதியாகி விட்டது. எனவே இனி மோடி சொல்லும் போலி வாக்குறுதிகளை கேட்டு பொதுமக்கள் ஏமாறக் கூடாது. மோடியின் கவர்ச்சியான பேச்சின்போது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு மாயாவதி பேசினார். #tamilnews

    Next Story
    ×