search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பக்தர்களுக்கு குழாய் மூலமாக பால், டீ வினியோகம் - தேவஸ்தான அதிகாரி தகவல்
    X

    திருப்பதியில் பக்தர்களுக்கு குழாய் மூலமாக பால், டீ வினியோகம் - தேவஸ்தான அதிகாரி தகவல்

    திருப்பதியில் பக்தர்களுக்கு குழாய் மூலமாக பால், டீ வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
    திருமலை:

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமலையில் பல்வேறு இடங்களிலும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிலும் பால், டீ, காபி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

    சமையல் அறைகளில் இருந்து ஊழியர்கள் மூலமாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், திருமலையில் பல்வேறு இடங்களுக்கு நேரிடையாக கொண்டு சென்று பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    அப்போது பால் கேன்கள் கீழே விழுந்து உடைந்து விடுகின்றன. அதில் இருந்து பால் கொட்டி வீணாகிறது. அதனை தடுக்க திருமலையில் பல்வேறு இடங்களிலும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிலும் குழாய்கள் மூலமாக பால், டீ, காபி ஆகியவற்றை கொண்டு சென்று பக்தர்களுக்கு வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. குழாய்கள் பதிப்பது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    மேலும் அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு உணவு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கிரேன் மூலமாக கொண்டு செல்ல ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    கிரேன் மூலமாக உணவுப்பொருட்களை விரைவாக கொண்டு செல்லலாம். அதன் மூலமாக அன்னப்பிரசாதத்தையும், உணவையும் விரைவாக தயார் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

    Next Story
    ×