search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான போக்குவரத்து துறை மந்திரியாக பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு
    X

    விமான போக்குவரத்து துறை மந்திரியாக பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு

    தெலுங்கு தேசம் எம்.பி. ராஜினாமா செய்துள்ளதையடுத்து விமான போக்குவரத்து துறை மந்திரியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. #PMModi #CivilAviationMinistry

    புதுடெல்லி:

    தெலுங்கு தேசம் எம்.பி. ராஜினாமா செய்துள்ளதையடுத்து விமான போக்குவரத்து துறை மந்திரியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் ஆந்திர அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆந்
    திரப்பிரதேச அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரண்டு பா.ஜ.க. மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து, மத்திய அமைச்சர்களாக இருந்த தெலுங்கு தேசம் எம்.பி.க்களான விமான போக்குவரத்து துறை மந்திரி அஷோக் கஜபதி ராஜு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மண் அறிவியல் துறை மந்திரி ஒய் எஸ் சவுத்திரி ஆகிய இருவரும் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். அவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.



    இந்நிலையில், அஷோக் கஜபதி ராஜுவின் ராஜினாமா காரணமாக விமான போக்குவரத்து துறை மந்திரியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மோடி ஏற்கனவே பணியாளர், பொதுமக்கள் குறைபாடுகள், ஓய்வூதியம் மற்றும் அணு சக்தி மற்றும் விண்வெளி துறையின் மந்திரியாக உள்ளார். #PMModi #CivilAviationMinistry #TDPQuitsNDA
    Next Story
    ×