search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பயணிகள் பாதுகாப்புக்காக டெல்லி பஸ்களில் அலாரம் பட்டன்
    X

    பெண் பயணிகள் பாதுகாப்புக்காக டெல்லி பஸ்களில் அலாரம் பட்டன்

    டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அலாரம் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. #panicalarm
    புதுடெல்லி:

    டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    குறிப்பாக பஸ்களில் பயணம் செய்யும் போது சில சமயம் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனை தடுக்க ஏற்கனவே டெல்லியில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று டெல்லியில் ஓடும் அரசு பஸ்களில் ‘பேனிக் பட்டன்’ என்ற அலாரம் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. ஆபத்தான கட்டத்தில் மற்றவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற இந்த பட்டனை அழுத்த வேண்டும். உடனே டிரைவர் மற்றும் கண்டக்டர் இருக்கை அருகில் உள்ள அலாரம் ஒலிக்கும். அவர் உஷாராகி பஸ்சை நிறுத்தி விடுவார்.

    புகாரின் அடிப்படையில் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச் செல்வார். ஆங்காங்கே உள்ள உதவும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிப்பார் அல்லது பெண்ணுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.


    இந்த பட்டன்கள் பஸ்களில் 4 இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும். முதல் கட்டமாக ராஜ்காட் மார்க்கத்தில் செல்லும் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளது. டெல்லி போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் இதை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் மகளிர் தின விழாவையொட்டி இந்த பேனிக் பட்டன் தொடங்கப்படுகிறது. பேனிக் பட்டன் ஒலித்தால் எப்படி செயல்பட வேண்டும் என டிரைவர்-கண்டக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். #Tamilnews
    Next Story
    ×