search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவத்தால் மறுகட்டமைக்கப்பட்ட எல்பின்ஸ்டோன் நடை மேம்பாலம் திறக்கப்பட்டது
    X

    ராணுவத்தால் மறுகட்டமைக்கப்பட்ட எல்பின்ஸ்டோன் நடை மேம்பாலம் திறக்கப்பட்டது

    கூட்ட நெரிசலால் 23 பேர் உயிரிழந்த எல்பின்ஸ்டோன் ரெயில் நிலைய நடை மேம்பாலம், ராணுவத்தால் மறுகட்டமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. #Elphinstone
    மும்பை:

    கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மும்பை எல்பின்ஸ்டோன் ரெயில் நிலைய நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து, மேம்பாலத்தை கட்டமைக்கும் பணி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


    2017 செப்டம்பரில் நிகழ்ந்த நெரிசல்

    விபத்து நடந்து 117 நாட்கள் ஆகிய நிலையில், புதுப்பிக்கப்பட்ட மேம்பாலம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மேம்பாலத்தை திறந்து வைத்தனர். 

    73.1 மீட்டர் நீளம், 3.65 மீட்டர் அகலத்தில் புதுப்பிக்கப்பட்ட மேம்பாலம் விலாசமாக கட்டப்பட்டுள்ளது. இதற்காக 10.44 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தினமும், 3.5 பொதுமக்கள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் மூன்று ரெயில் நிலைய பகுதிகளில் கட்டப்பட்ட நடைமேம்பாலம் இன்று திறக்கப்பட்டது. #TamilNews
    Next Story
    ×