search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா, மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் - 3 தொகுதிகளில் 70 முதல் 77 சதவீதம் வாக்குப்பதிவு
    X

    ஒடிசா, மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் - 3 தொகுதிகளில் 70 முதல் 77 சதவீதம் வாக்குப்பதிவு

    ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 70 முதல் 77 சதவீதம் வரையிலான வாக்குகள் பதிவானது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 70 முதல் 77 சதவீதம் வரையிலான வாக்குகள் பதிவானது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒடிசா மாநிலத்தின் பீஜப்பூர் சட்டசபை தொகுதி மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இறந்ததை தொடர்ந்து, இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இடைத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டது.

    ஒடிசாவின் பீஜப்பூர் சட்டசபை தொகுதியில் 72 சதவீதமும், மத்திய பிரதேசத்தின் மங்கோலி தொகுதியில் 77 சதவீதமும், கொலாரஸ் தொகுதியில் 70 சதவீதமும் வாக்குகள் பதிவானது. நேற்று பதிவான வாக்குகள் வரும் 28-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×