search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் மோடி
    X

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் மோடி

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிந்தது. அவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.

    நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. மேலும், நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி உள்பட 6 பேரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


     
    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த 4-வது குளோபல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுககப்படும். நிதி முறைகேடுகளுக்கு எதிராக எனது அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.
     
    நிதி நிறுவனங்களில் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கக்கூடிய இடத்தில் இருப்போர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய வேண்டும். தங்களது வேலையில் உள்ள நெறிமுறைகளை அவரகள் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உள்ளவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நிதி மோசடிகளை தடுக்கமுடியும் என தெரிவித்தார். #Modi #PMModi NiravModiScam #NiravModiLoot #NiravModiLootsIndia #PunjabNationalBank #PNBScam
    Next Story
    ×