search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை டெல்லியில் இன்று சந்திக்கிறார் மோடி
    X

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை டெல்லியில் இன்று சந்திக்கிறார் மோடி

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச உள்ளார். #CanadaPM #JustinTrudeau #PMModi
    புதுடெல்லி:

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.



    இதற்கிடையே, கனடா பிரதமருக்கு இந்திய அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்காமல் இணை மந்திரியை அனுப்பி வரவேற்றதாகவும் விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    ‘கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நாளை (இன்று) சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். குறிப்பாக அவரது குழந்தைகளை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன். இந்தியா - கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக  ட்ரூடோவுடன் பேச உள்ளேன். நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அவர் அளிக்கும் ஆழமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்’ என மோடி டுவிட் செய்துள்ளார்.

    மோடி 2015-ம் ஆண்டு கனடா சென்றபோது, பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது குழந்தை எல்லா கிரேசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அவரை மோடி சந்திப்பது  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #CanadaPM #JustinTrudeau #PMModi #tamilnews

    Next Story
    ×