search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கையை சுத்தப்படுத்துவதாக பேசும் பா.ஜ.க. ஆட்சியில் வங்கிகள் திவாலாகி வருகிறது - ஹர்திக் படேல் குற்றச்சாட்டு
    X

    கங்கையை சுத்தப்படுத்துவதாக பேசும் பா.ஜ.க. ஆட்சியில் வங்கிகள் திவாலாகி வருகிறது - ஹர்திக் படேல் குற்றச்சாட்டு

    மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் பேசுகையில், கங்கையை சுத்தப்படுத்துவதாக பேசிவரும் பா.ஜ.க. ஆட்சியில் வங்கிகளே தொடர்ந்து திவாலாகி வருகிறது என குற்றம் சாட்டினார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தின் மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் குஜராத்தை சேர்ந்த படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:  

    மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொல்லி வருகின்றனர்.
     
    ஆனாலும், விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி ஆகியோர் நமது நாட்டின் பணத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர். இதிலிருந்தே பாஜக ஊழலை ஆதரித்து வருவது கண்கூடாக தெரிகிறது.

    பணமோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி சென்றுள்ளவர்களை எப்போது இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதை பிரதமர் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ உறுதியாக கூறமுடியுமா? நாட்டில் தொடர்ந்து வங்கிகள் திவாலாகி வரும் நிலையில், கங்கையை சுத்தப்படுத்துவது குறித்து பேசி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×