search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு நோட்டீஸ் - ஐ.சி.ஏ.ஐ. அதிரடி
    X

    பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு நோட்டீஸ் - ஐ.சி.ஏ.ஐ. அதிரடி

    நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது. #PNBScam
    புதுடெல்லி:

    நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது.
     
    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிந்தது. அவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.



    நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. மேலும், நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி உள்பட 6 பேரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
     
    இந்நிலையில், நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் ஷோகாஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சார்ட்டர்ட் அக்க்வுண்டட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பஞ்சாப் நேஷன்ல் வங்கி மற்றும் கீதாஞ்சலி நகைக்கடை ஆடிட்டர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விடுத்துள்ளோம். வங்கி மோசடி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றனர்.

    மேலும், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை, செபி நிறுவன அதிகாரிகளுக்கும் இந்த மோசடி குறித்து விளக்கம் கேட்டு கடிதங்கள் அனுப்பப்ப்ட்டுள்ளன் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PNBScam #tamilnews 
    Next Story
    ×