search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழியர்களை வேறு வேலைக்கு போகும்படி தகவல் அனுப்பிய நிரவ் மோடி
    X

    ஊழியர்களை வேறு வேலைக்கு போகும்படி தகவல் அனுப்பிய நிரவ் மோடி

    வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிரவ் மோடி, தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் வேறு வேலைகளை தேடிக்கொள்ளும்படி தகவல் அனுப்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளை இங்குள்ள விசாரணை முகமைகள் மேற்கொண்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வங்கி அதிகாரிகள் உட்பட, இந்த மோசடியில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிரவ் மோடியின் வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.



    நிரவ் மோடி மற்றும் மெஹல் சோக்‌ஷி ஆகிய இருவரும் வங்கி மோசடி தொடர்பாக கைது நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள நிலையில், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார் நிரவ் மோடி.

    அதில், தற்போது உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க முடியாது என்பதால், ஊழியர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிறுவன பங்குகள் மற்றும் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டால், வழங்கவேண்டிய தொகையை வழங்குவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

    தற்போது உள்ள சூழலில் ஊழியர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், மின்னஞ்சல் மூலம் நீரவ் மோடி தகவல் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.  #tamilnews



    Next Story
    ×