search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார் அவானி சதுர்வேதி
    X

    விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார் அவானி சதுர்வேதி

    இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார். #AvaniChaturvedi
    புதுடெல்லி:

    இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார்.  

    இந்திய ராணுவத்தில் முதல் முறையாக விமானப் படை விமானிகளாக பெண்களையும் சேர்க்கலாம் என பாதுகாப்பு துறை முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமானப்படை போர் விமானிகளாக பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய 3 பெண்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.



    இந்த மூன்று பெண்களும் விமானப்படையில் பல்வேறு சவால் மிக்க பயிற்சிகளையும் மேற்கொண்டு போர் விமானிகளாக தேர்வாகினர். பயிற்சி முடித்த அவர்களை முறைப்படி விமானப்படையில் பணிக்காக சேர்க்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அதில் அப்போதைய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் பெண் விமானிகள் மூவரும் முறைப்படி போர் விமானிகளாக பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார்.

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை அவானி சதுர்வேதி தனியாக நேற்று ஓட்டிச் சென்றார். இதன்மூலம் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையை இவர் பெற்றார்.

    அவானி சதுர்வேதி, மத்தியப் பிரதேசத்தின் சத்னாவைச் சேர்ந்தவர். அவர் ராணுவத்தில் இருக்கும் தனது சகோதரரை பார்த்து அவரைப் போல் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஊக்கம் பெற்றவர். விமான பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் விமானப் படையில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AvaniChaturvedi #tamilnews 
    Next Story
    ×