search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ்மோடியை பிரதமர் அழைத்து வருவாரா? - ராகுல் காந்தி கிண்டல்
    X

    வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ்மோடியை பிரதமர் அழைத்து வருவாரா? - ராகுல் காந்தி கிண்டல்

    பிரதமர் மோடி அடுத்த முறை வெளிநாடு செல்லும்போது ரூ.11,700 கோடி கொள்ளையடித்து சென்ற நிரவ்மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவாரா? என்று மேகாலயாவில் ராகுல் காந்தி கிண்டலாக பேசியுள்ளார் #RahulGandhi
    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 27-ந்தேதி நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கு பிரசாரம் செய்தார். மென்டிபாதர் பகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசார பொதுக் கூட்ட மேடையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.22 ஆயிரம் கோடியுடன் வெளி நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதை பிரதமர் அறிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி அடுத்த முறை வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது நிரவ்மோடியை இந்தியாவுக்கு அழைத்து வருவாரா?

    நமது அனைவர் சார்பாகவும் அவரை பிரதமர் அடுத்த வெளிநாட்டு பயணத்தின் போது அழைத்து வர வேண்டும்.

    கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நாட்டுக்கு திரும்ப வரும் போது நாம் அனைவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

    நிரவ் மோடி வைரங்களை விற்கும் வியாபாரி. நமது பொருட்களை எடுத்து சென்றதன் மூலம் அவரது கனவு நிறைவெறிவிட்டன. ஆனால் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நமது கனவுகளை விற்று விட்டார்.



    பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்துடன் நிரவ் மோடி வெளியேறும் போது இந்த அரசு மகிழ்ச்சியுடன் தூங்கிக் கொண்டு இருக்கிறது. நமது கனவுகளை நிறைவேற்றுவதாக கூறி மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தார். இளைஞர்கள், விவசாயிகள், மற்றும் அனைத்து தரப்பினரும் அவர் நல்லது செய்வார் என்று எதிர்ப்பார்த்தனர். 4 ஆண்டுகள் ஆகியும் அவர் நமது கனவுகளை நிறைவேற்றவில்லை.

    ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று இன்னொரு மோடி (பிரதமர்) அறிவித்தார். 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஒன்றையும் நிறைவேற்றவில்லை. இந்திய மக்களின் கனவுகளை மோடி விற்றுவிட்டார்.

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சேர்ந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதை கொள்கையாக வைத்துள்ளார். மேகாலியா பிரசாரத்தில் பா.ஜனதா கோடிக் கணக்கான பணத்தை செலவழித்தது. பா.ஜனதாவின் ‘பி’ அணியாக தேசிய மக்கள் கட்சி செயல்படுகிறது.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #RahulGandhi #Modi #NarendraModi #NiravModi #tamilnews
    Next Story
    ×