search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோவின் அடுத்த சாதனை - திரைப்பட பட்ஜெட்டை விட சந்திராயன் 2 செலவு குறைவு
    X

    இஸ்ரோவின் அடுத்த சாதனை - திரைப்பட பட்ஜெட்டை விட சந்திராயன் 2 செலவு குறைவு

    விண்வெளி அறிவியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான இன்ஸ்டெல்லரை விட இஸ்ரோவின் சந்திராயன் - 2 விண்கலத்தின் திட்ட செலவுகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ISRO
    பெங்களூர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமானது நிலவினை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் - 1 விண்கலத்தை செலுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் உருவான இந்த விண்கலம் நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து தகவல்களை அனுப்பியது.

    தற்போது, இதன் தொடர்ச்சியாக சந்திராயன் - 2 விண்கலம் வரும் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நெல்லை மகேந்திரகிரி, பெங்களூர் மற்றும் சித்ரதுர்கா ஆகிய இடங்களில் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த திட்ட செலவுகள் 800 கோடி ரூபாயை தொடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளி அறிவியலை மையமாக கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘இன்ஸ்டெல்லர்’ என்ற ஹாலிவுட் படத்தின் பட்ஜெட் 1062 கோடி ரூபாய் ஆகும். ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை விட குறைவான செலவில் விண்வெளியில் இஸ்ரோ தனது முத்திரையை பதித்து வருகிறது.


    இன்ஸ்டெல்லர் படத்தில் வரும் ஒரு காட்சி

    கட்டமைப்பை எளிமையாக்கியது, பொருட்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு, நிறைவான முடிவை பெறுவது ஆகிய நடவடிக்கைகள் தான் திட்ட செலவுகளை குறைத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ செலுத்திய மங்கல்யான் விண்கலம், கிராவிட்டி என்ற ஹாலிவுட் படத்தின் பட்ஜெட்டை விட குறைவான செலவுகள் கொண்டதாகும். அப்போதே, இஸ்ரோவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது குறிப்பிடத்தக்கது. #ISRO #Chandrayaan2 #TamilNews
    Next Story
    ×