search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கையெறி குண்டுவீச்சு - ஜம்மு காஷ்மீர் எல்லை மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்
    X

    பாகிஸ்தான் கையெறி குண்டுவீச்சு - ஜம்மு காஷ்மீர் எல்லை மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்

    எல்லையில் பாகிஸ்தான் படையினர் கையெறி குண்டுகளை வீசி வருவதால், ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
    ஸ்ரீநகர்:

    எல்லையில் பாகிஸ்தான் படையினர் கையெறி குண்டுகளை வீசி வருவதால், ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று கையெறி குண்டுகளை தொடர்ந்து வீசி வருகின்றனர்.

    இதையடுத்து, பாராமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள உரி பகுதியை சுற்றியுள்ள சுரந்தா மற்றும் சிலிகோட், தாஜல், சோனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எடுக்கப்பட்டு வரும் இது வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.

    எல்லையில் பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×