search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் ஷூ, சாக்ஸ் அணிய தடை
    X

    பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் ஷூ, சாக்ஸ் அணிய தடை

    பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஷூ, சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. காப்பி அடிப்படை தடுக்க மாநில பள்ளி கல்வி வாரியம் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் சமீப காலங்களில் நடந்த அரசு பொதுத்தேர்வில் பல்வேறு வகையான மோசடிகள் நடந்தது.

    இதனால் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி அரசு மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    இந்த நிலையில் பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. காப்பி அடிப்படை தடுக்க இந்த நடவடிக்கையை மாநில பள்ளி கல்வி வாரியம் மேற்கொண்டு உள்ளது.


    தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று பள்ளி கல்வி வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

    பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 17 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். 1426 தேர்வு மையங்கள் உள்ளன.

    அங்கு சமீபத்தில் நடந்த இடைநிலை தேர்வில் புதிய விதிமுறைப்படி மோசடியில் ஈடுபட்ட 985 மாணவிகள் நீக்கம் செய்யப்பட்டனர். 25 பேர் கைதாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×