search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    83 வயதான சுக்ராம், 30 வயதான பெண்ணை திருமணம் செய்ததை படத்தில் காணலாம்.
    X
    83 வயதான சுக்ராம், 30 வயதான பெண்ணை திருமணம் செய்ததை படத்தில் காணலாம்.

    83 வயதில் 30 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்த முதியவர்

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் வாரிசுக்காக 83 வயதான முதியவர் 30 வயது பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வெகுவிமர்சையாக நடந்தது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுக்ராம் (வயது 83). 1958-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் 83 வயதான சுக்ராமுக்கு 2-வது திருமணம் நடந்தது. 30 வயதான ரமேசி தேவி என்பவரை அவர் மணந்து கொண்டார். அதாவது 60 ஆண்டுகளுக்கு பிறகு சுக்ராம் தனது முதிர்ச்சியான காலத்தில் திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமணம் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வெகுவிமர்சையாக நடந்தது. முதல் மனைவியின் முன்னிலையில் தான் திருமணம் நடந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் திருமண விழாவில் பின்பற்றப்பட்டன. 12 கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் இதில் பங்கேற்றனர்.

    ஆண் வாரிசுக்காகதான் சுக்ராம் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது ஒரே மகன் 30 வயதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனான்.

    தொழிலாளியாக இருந்த அவர் உழைத்து முன்னேறி காண்டிராக்டராக மாறினார். இதனால் ஏராளமான சொத்துக்கள் அவரிடம் இருக்கிறது. இந்த சொத்துக்களை அனுபவிக்க ஆண் வாரிசு இல்லாததால் அவர் 2-வது திருமணம் செய்தார். இது குறித்து சுக்ராம் கூறியதாவது:-

    டெல்லி, அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் எனக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. எனது ஒரே மகன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.


    தற்போது இந்த சொத்தை அனுபவிக்க மகன் இல்லை. இதற்காகவே நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன்.

    2-வது திருமணம் செய்ததில் எனது முதல்- மனைவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவரது ஒப்புதலுடன் தான் திருமணம் நடந்தது. கடவுளின் கருணையால் இது நடந்தது. எங்களது ஒரே விருப்பம் மகன்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மணப்பெண்ணின் உறவினர் கூறும்போது, ரமேசி தேவி அவரது வீட்டுக்கு ஒரே பெண்தான். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன்தான் இந்த திருமணம் நடந்தது” என்றார்.

    அந்த கிராமத்தை சேர்ந்த ராம்ஜிலால் கூறும் போது, 83 வயது முதியவருக்கு ஆடல் - பாடலுடன் திருமண ஊர்வலம் நடந்தது ஆச்சரியத்தை அளித்தது. முதியவருக்கு எங்களால் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்” என்றார்.

    30 வயது பெண்ணை 83 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டதை அந்த கிராமத்தை சேர்ந்த யாரும் போலீசில் புகார் செய்யவில்லை.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சுபர்தோ கூறும் போது, “இந்த திருமணம் தொடர்பாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை” என்றார். #Tamilnews
    Next Story
    ×