search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது
    X

    ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது

    ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக மும்பையில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #NiravModiScam #PNBScam
    மும்பை:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்‌ஷி மீதும் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தது.

    அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கொல்கத்தா நகரில் உள்ள ஜாதவ்பூர், கஸ்பா, சால்ட் லேக், நியூ டவுன் மற்றும் எல்ஜின் ரோடு ஆகிய நகைக்கடைகளில் நேற்று நடைபெற்ற சோதனையில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்த வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை வங்கி கிளையின் அந்நியச் செலாவணிப்பிரிவு தலைமை மேலாளர் பெச்சு திவாரி, மேலாளர் யஷ்வந்த், ஏற்றுமதி அதிகாரி பிரபுல் சாவந்தையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது. #NiravModiScam #PNBScam #tamilnews
    Next Story
    ×