search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்மையான தேச பக்தர் - மணல் சிற்பத்தால் சத்ரபதிக்கு சிறப்பு சேர்த்த சுதர்சன் பட்நாயக்
    X

    உண்மையான தேச பக்தர் - மணல் சிற்பத்தால் சத்ரபதிக்கு சிறப்பு சேர்த்த சுதர்சன் பட்நாயக்

    மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான இன்று அவரது உருவத்தை மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணற் சிற்பமாக செதுக்கியுள்ளார். #ChhatrapatiShivajiMaharaj
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

    இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் நினைவிருக்கலாம்.

    இந்நிலையில், மராட்டியத்தின் மிகச்சிறந்த மன்னராக விளங்கிய சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் மராட்டியம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சத்ரபதியின் உருவத்தை பூரி கடற்கரையில் பட்நாயக் சிற்பமாக செதுக்கியுள்ளார்.

    'சிறந்த தேச பக்தர்' என்ற வாசகத்துடன் இவர் வரைந்துள்ள மணற் சிற்பத்தை ஏராளமான மக்கள் பார்த்து ரசிக்கின்றனர். #ChhatrapatiShivajiMaharaj #tamilnews
    Next Story
    ×