search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களுக்கு இலவச நாப்கின்கள்- பா.ஜ.க.வைத் தொடர்ந்து காங்கிரசும் வாக்குறுதி
    X

    பெண்களுக்கு இலவச நாப்கின்கள்- பா.ஜ.க.வைத் தொடர்ந்து காங்கிரசும் வாக்குறுதி

    மேகாலயாவில் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறியதுபோன்று காங்கிரசும் கூறியுள்ளது.
    ஷில்லாங்:

    மேகாலயாவில் வரும் 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வாக்குகளைப் பெறுவதற்காக மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.

    அவ்வகையில்,  சமீபத்தில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களைக் கவரும் வகையில் வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேகாலயாவில் 2009ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும்  பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கப்போவதாக கூறியுள்ளது. மேகாலயாவில் பிரசாரம் செய்து வரும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் இத்தகவலை தெரிவித்துள்ளார். சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் நிதி மந்திரியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

    ‘மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. இலவச நாப்கின்கள் வழங்கும் அவர்களின் வாக்குறுதியும் நிறைவேறாது. பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நிர்பயா வழக்கிற்கு பிறகு நிறைய சட்டங்களை மாற்றியுள்ளோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. நிர்பயா நிதியில் 60 சதவீதம் அளவுக்கு பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கிறது’ என்றும் சுஷ்மிதா தேவ் கூறினார். #Tamilnews
    Next Story
    ×