search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டதாக சந்திரபாபு நாயுடு கருத்து
    X

    சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டதாக சந்திரபாபு நாயுடு கருத்து

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பொறுமை இழந்து விட்டோம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #SpecialStatusForAndra
    அமராவதி:

    ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், அது நிறைவேற்றப்படவில்லை.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இவ்விவகாரம் எதிரொலித்ததின் விளைவாக இரு அவைகளும் அம்மாநில எம்.பி.க்களால் முடக்கப்பட்டன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இவ்விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டதாகவும், ஆந்திராவுக்காக எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    மேலும், “மத்திய அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்து வருவதை தொடர்ந்தால் நாங்கள் அமைதியை தொடர முடியாது” என்று தெரிவித்தார். இதற்காக 29 முறை டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் மந்திரிகளை தான் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×