search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனி ரெயில்கள், பெட்டிகளை இனி ஆன்லைனில் புக்கிங் செய்யலாம் என ரெயில்வே அறிவிப்பு
    X

    தனி ரெயில்கள், பெட்டிகளை இனி ஆன்லைனில் புக்கிங் செய்யலாம் என ரெயில்வே அறிவிப்பு

    சுற்றுலா, மத விழாக்கள் போன்றவற்றிக்காக தனி ரெயில்கள், பெட்டிகளை இனி ஆன்லைனில் புக்கிங் செய்யலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது. #IRCTC #onlinebooking #Railwaycoaches
    புதுடெல்லி:

    பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும்போதும், கொண்டாட்டங்களின் போதும் கல்விச் சுற்றுலாக்களின் போதும் தனி ரெயில்கள், பெட்டிகள் அல்லது சொகுசு வசதிகளை பதிவு செய்ய எழுத்துப்பூர்வ கோரிக்கை கடிதம் அளிக்க வேண்டும். இதற்கென தேவையான விவரங்களையும் கோரிக்கை கடிதத்துடன் இணைத்து அளிக்கப்பட வேண்டும். ரெயில்வே குறிப்பிடும் டெபாசிட் தொகையை செலுத்திய பின்பு டிக்கெட் வழங்கப்படும். இந்த நடைமுறைக்கு நாம் நேரில் செல்ல வேண்டிய தேவையும் இருந்தது.

    ஆனால், தற்பொழுது இந்த நடைமுறையை ஐ.ஆர்.சி.டி.சி. எளிதாக்கியுள்ளது. இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும்போதும், கொண்டாட்டங்களின் போதும், கல்விச் சுற்றுலாக்களின் போதும் தனி ரெயில்கள், பெட்டிகளை பதிவு செய்வார்கள். டிராவல் ஏஜென்சிகளின் மூலம் இந்த புக்கிங் நடைபெற்று வந்தது. ஆனால் தற்பொழுது இந்த புக்கிங்கை ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கு கூடுதலாக 5 சதவிகித புக்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் சேவை வரியாக 30 சதவிகிதம் விதிக்கப்படும். இதற்கு பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ. 50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவதும் டிஜிட்டல் முறையில் இந்த புக்கிங் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #IRCTC #onlinebooking #Railwaycoaches #tamilnews
    Next Story
    ×