search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு
    X

    பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு

    இந்தியாவில் உள்ள 4 கோடி பசுக்களுக்கு முதல்கட்டமாக 50 கோடி செலவில் ஆதார் போன்று அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #Aadhaarlikenumber #CowIdentification
    டெல்லி:

    இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் கடந்த சில காலமாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. பசுக்களை கடத்தி செல்கின்றனர் மற்றும் இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் மற்றும் பசுவை வாங்கி செல்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்டது.



    மத்திய அரசின் நலதிட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே பசுக்களுக்கும் இதுபோன்ற அடையாள அட்டை வழங்க பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.

    இந்திய - வங்காள தேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தற்போது பசுக்களுக்கு ஆதார் போன்று அடையாள அட்டையை வழங்க அரசு முடிவு செய்து அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி பசுகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக பசுக்களிடம் ரேகை எடுத்தல், இனம், வயது, பாலினம், உயரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் என பயோமெட்ரிக் வகையில் தகவல்கள் சேகரிக்கப்படும் எனவும், ஒவ்வொரு அட்டைக்கும் ரூ. 8 முதல் ரூ. 10 வரையில் செலவாகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. #Aadhaarlikenumber #CowIdentification #CentralGovernment #tamilnews
    Next Story
    ×