search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் சக பயணிகளுக்கு உதவிய ராகுல் காந்தி: வைரலாகும் புகைப்படங்கள்
    X

    விமானத்தில் சக பயணிகளுக்கு உதவிய ராகுல் காந்தி: வைரலாகும் புகைப்படங்கள்

    மேகாலயா சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பயணத்தின்போது விமானத்தில் சக பயணிகளுக்கு உதவிய காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. #rahulgandhi
    புதுடெல்லி:

    மேகாலயாவில் அடுத்த மாதம் 27-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு பிரசாரத்தை ஆரம்பித்தார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மேகாலயா செல்வதற்காக விமானத்தில் சென்றார். அந்த விமானம் முதலில் கவுகாத்திக்கு சென்று அதன்பின் ஷில்லாங் நகரை அடைந்தது.



    இந்நிலையில், கவுகாத்தியில் தனது விமானத்தில் ஏறிய சக பயணிகளின் உடைமைகளை வைப்பதற்கு ராகுல் காந்தி உதவியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஏற்கனவே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கோவா ரிசார்ட்டில் தங்கியபோது, சாலையில் சைக்கிள் ஓட்டியபடி செல்வது போலவும், செல்பி எடுத்தவர்களுடன் சகஜமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. #rahulgandhi #tamilnews
    Next Story
    ×