search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்களுடைய ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது: மந்திரி பேச்சால் சர்ச்சை
    X

    எங்களுடைய ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது: மந்திரி பேச்சால் சர்ச்சை

    பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பார் பேசியதால் பெரும் சர்ச்சையாகி உள்ளது. #BJP #Corruption
    பாலியா:
     
    உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஓம் பிரகாஷ் ராஜ்பார், மாநிலத்தில் தற்போது நடந்துவரும் ஆட்சியின் கீழ் ஊழல் அதிகரித்துவிட்டது என கூறியது யோகி ஆதித்யநாத் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    உ.பி.யில் பாரதீய ஜனதா ஆட்சியில் அங்கம் வகித்து உள்ள சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் பிரகாஷ் ராஜ்பார் பேசுகையில், இப்போதைய ஆட்சியின் கீழ் எங்களுடைய கட்சிக்கு மரியாதையும் கிடையாது என குறிப்பிட்டு உள்ளார். 

    “சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியுடன் ஒப்பிடும் போது இப்போது பாரதீய ஜனதா ஆட்சியின் கீழ் ஊழல் அதிகரித்துதான் உள்ளது. இந்த அரசில் நான் பங்கு பெற்று இருந்தாலும், இது எங்களுடைய அரசு கிடையாது. நாங்கள் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து உள்ளோம்,” என பிரகாஷ் ராஜ்பார் பிடிஐக்கு பேட்டியளித்து உள்ளார். 

    பாரதீய ஜனதா ஆட்சியில் எங்களுடைய கட்சிக்கு மதிப்பு கிடையாது என கூறி உள்ள பிரகாஷ் ராஜ்பார், “இவ்விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் பேசிஉள்ளேன்,” என கூறி உள்ளார். 

    2019 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பிரகாஷ் ராஜ்பார் பேசுகையில், “பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தது. பாரதீய ஜனதா எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றால் நாங்கள் தனியாக போட்டியிடுவோம்,”என்றார். 

    403 உறுப்பினர்கள் கொண்ட உத்தரபிரதேச சட்டசபையில் சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். #tamilnews #BJP #Corruption
    Next Story
    ×