search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய 80 ஆயிரம் பேராசிரியர்களை கண்டுபிடிக்க உதவிய ஆதார்
    X

    ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய 80 ஆயிரம் பேராசிரியர்களை கண்டுபிடிக்க உதவிய ஆதார்

    ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரமாக பணியாற்றி வந்த சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் ஆதார் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். #Aadhaar #GhostTeachers #EducationMinistry
    புதுடெல்லி:

    ஒரு பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதை தடுக்கவும், போலி பேராசிரியர்களை கண்டுபிடிப்பதற்காகவும் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரமாக 80,000 பேர் பணியாற்றி வந்த அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “சிலர் முறைகேடு செய்து, பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியராக பணியாற்றினர். ஆதார் கட்டாயமாக்கப்பட்டதன் மூலம், இதுபோன்று பணியாற்றி வந்த 80,000 பேராசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் இல்லை. அவர்கள் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து பல்கலைக்கழகங்களும் முறைகேடுகளை தடுக்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்வது மொபைல் எண் மற்றும் இ-மெயிலை பரிமாறிக்கொள்வது போன்றது. மொபைல் எண்ணை பரிமாறிக் கொள்வதால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடிவிட முடியாது. அதுபோலதான் ஆதாரும் செயல்படுகிறது. இது முழு பாதுகாப்பானது’’ என்றார். #tamilnews #Aadhaar #GhostTeachers #EducationMinistry
    Next Story
    ×