search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு
    X

    முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு

    முத்தலாக் முறையை ஒழிக்க பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவுக்கு அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைப்பதற்கான மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்டமந்திரி ரவிஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். 

    இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என இம்மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க சார்பில் பேசிய அன்வர் ராஜா, இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து இந்த மசோதாவை மிகக்கடுமையாக எதிர்த்து பேசிய ஐதராபாத் எம்.பி ஓவைசி, இந்த மசோதா அடிப்படை உரிமைகளை மீறுகிறது மற்றும் முறையான சட்ட இணக்கம் இதில் இல்லை என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.

    உறுப்பினர்களுக்கு பதிலளித்து பேசிய ரவிஷங்கர் பிரசாத், “பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே, இந்த மசோதா. இதில், மதத்திற்கு தொடர்பில்லை” என்று கூறினார். 

    இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவுக்கு அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் ஷைஸ்தா அம்பர், இந்த அரிய முயற்சிக்கு துணையாக இருந்த சுப்ரீம் கோர்ட்டுக்கும் இந்திய சட்ட வாரியத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

    இந்த சட்டத்தின் மூலம் கணவன் - மனைவி இடையிலான பந்தம் வலுவடையும் என்றும் தெரிவித்துள்ள அவர், இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் தவறான கண்ணோட்டோங்களை கைவிட்டு, முஸ்லிம் பெண்களுக்கு உதவிடும் வகையில் ஆதரவு தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
    Next Story
    ×