search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பெண்ணை மணந்து ‘முத்தலாக்’ செய்த ஓமன் நாட்டுக்காரர்: சுஷ்மா சுவராஜுக்கு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் கடிதம்
    X

    இந்திய பெண்ணை மணந்து ‘முத்தலாக்’ செய்த ஓமன் நாட்டுக்காரர்: சுஷ்மா சுவராஜுக்கு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் கடிதம்

    முத்தலாக் முறைக்கு முடிவுகட்ட இந்திய அரசு மும்முரம் காட்டிவரும் நிலையில் இந்திய பெண்ணை மணந்து தொலைபேசி மூலம் ‘முத்தலாக்’ செய்த ஓமன் நாட்டுக்காரர் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
    ஐதராபாத்:

    ஓமன் நாட்டின் நிஸ்வான் பகுதியை சேர்ந்த சைத் ஜஹ்ராப் அல் ராஜி என்பவருக்கும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரை சேர்ந்த கவுசியா பேகம் என்ற 31 வயது பெண்ணுக்கும் கடந்த 2008-ம் ஆண்டு ஐதராபாத் நகரில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

    இந்திய பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சைத் ஜஹ்ராப் அல் ராஜி தன்னிடம் காட்டப்பட்ட 7 பெண்களில் கவுசியாவை தேர்வு செய்துள்ளார். சில நாட்கள் கவுசியாவுடன் தங்கி இருந்த அவர் ஓமன் நாட்டுக்கு சென்று விட்டார். ஆண்டுக்கு ஒருமுறை ஐதராபாத் வந்து கவுசியாவுடன் உல்லாசமாக இருந்துவிட்டு செல்லும் சைத் ஜஹ்ராப் அல் ராஜி அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்பி வைப்பார்.

    இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொலைபேசி மூலம் ’முத்தலாக்’ கூறி சைத் ஜஹ்ராப் அல் ராஜி தன்னை விவாகரத்து செய்து விட்டதாகவும்,ஓமன் நாட்டில் இருக்கும் தனது கணவரிடம் இருந்து மஸ்கட் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக தனக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு கவுசியா பேகம் கடிதம் அனுப்பியுள்ளார்.
    Next Story
    ×